தீர்வின்றித் திணறும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மீரியபெத்த மக்கள்

தீர்வின்றித் திணறும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மீரியபெத்த மக்கள்

எழுத்தாளர் Bella Dalima

30 Jun, 2015 | 8:25 pm

மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வு கேள்விக்குறியுடனேயே நீண்டு செல்கின்றது.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி மலையகத்தை மட்டுமன்றி நாட்டில் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது மீரியபெத்த மண்சரிவு சம்பவம்.

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பலர் தொழிற்சாலைகளிலும், பாடசாலைகளிலும் தங்கவைக்கப்பட்டனர்.

இதில் சுமார் 75 குடும்பங்கள் மாகந்த தொழிற்சாலையில் தங்கவைக்கப்பட்டனர்.

ஆரம்பத்தில் மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனர்த்த முகாமைத்துவம் மற்றும் அரச அதிகாரிகள் வீடுகளை அமைத்துக்கொடுப்பதாக உறுதி அளித்திருந்தனர்.

எனினும், புதிதாக அமைக்கப்படும் வீட்டுத் திட்டத்தில் 16 குடும்பங்களுக்கு வீடுகளை வழங்க பிரதேச செயலகம் மறுத்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.

தோட்ட நிர்வாகத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்கள் முழுமையாக வழங்கப்பட்ட போதிலும் பிரதேச செயலகம் வீடுகளை வழங்க மறுத்து வருவதாக மக்கள் சுட்டிக்காட்டினர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்