சுமத்திரா தீவில் இராணுவ விமானம் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் 113 பேர் உயிரிழப்பு

சுமத்திரா தீவில் இராணுவ விமானம் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் 113 பேர் உயிரிழப்பு

சுமத்திரா தீவில் இராணுவ விமானம் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் 113 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

30 Jun, 2015 | 3:04 pm

இந்தோனேஷியாவின் சுமத்திரா தீவில், அந்நாட்டு இராணுவ விமானம் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் 113 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுமத்திரா தீவில் இருந்து இந்தோனேஷிய இராணுவத்திற்குச் சொந்தமான போக்குவரத்து விமானம், புறப்பட்டுச் சென்ற சில நிமிடங்களில் குடியிருப்பு பகுதியில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

வடக்கு சுமத்திரா தீவின் மெடான் நகரில் ஹோட்டல் மற்றும் வீடுகள் நிறைந்த பகுதியில் விமானமானது வீழ்ந்துள்ளது.

மீட்புப் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்ற நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்