சர்வதேச பொறிமுறையின் கீழ் விசாரணை வேண்டும்: திருமலையில் ஆர்ப்பாட்டம்

சர்வதேச பொறிமுறையின் கீழ் விசாரணை வேண்டும்: திருமலையில் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Bella Dalima

30 Jun, 2015 | 9:12 pm

காணாமற்போனோர் தொடர்பில் சர்வதேச பொறிமுறையின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி திருகோணமலையில் இன்றும் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டம் திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நான்காவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டது.

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் நான்காம் நாள் அமர்வு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற வேளை இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது

வீதியோரம் பதாதைகளை ஏந்தியவாறு தங்களின் எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் உள்ளக விசாரணைகளில் தங்களுக்கு நம்பிக்கையில்லை எனவும், சர்வதேச விசாரணையே வேண்டும் எனவும் கூறினர்.

இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் காணமற்போனோரின் குடும்ப உறுப்பினர்களும் உறவினர்களும் பங்குபற்றியிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்