க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள் எதிர்வரும் ஜூலை மாதம் வெளியாகும்

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள் எதிர்வரும் ஜூலை மாதம் வெளியாகும்

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள் எதிர்வரும் ஜூலை மாதம் வெளியாகும்

எழுத்தாளர் Staff Writer

30 Jun, 2015 | 7:52 am

கடந்த வருடம் நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் மீளாய்வு செய்யப்பட்ட பெறுபேறுகள் எதிர்வரும் ஜூலை மாதம் 30 ஆம் திகதி வெளியாகவுள்ளன.

பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்காக ஒரு இலட்சத்து ஏழாயிரம் பேர் வரை விண்ணப்பத்திருந்ததாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே புஷ்பகுமார தெரிவித்தார்.

பாடசாலை பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் அந்தந்த பாடசாலைகளுக்கும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான பெறுபேறுகள் தபால் மூலமும் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், மீளாய்வு செய்யப்பட்ட பெறுபேறுகளை இணையத்தளத்தில் வெளியிடவும் பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது, இம்முறை ஒரு மாதத்திற்கு முன்னதாகவே மீளாய்வு பெறுபேறுகளை வெளியிடுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்