காணாமல் போனோர் தொடர்பில் சாட்சியமளிக்க திருகோணமலை மக்களுக்கு இன்றும் வாய்ப்பு

காணாமல் போனோர் தொடர்பில் சாட்சியமளிக்க திருகோணமலை மக்களுக்கு இன்றும் வாய்ப்பு

காணாமல் போனோர் தொடர்பில் சாட்சியமளிக்க திருகோணமலை மக்களுக்கு இன்றும் வாய்ப்பு

எழுத்தாளர் Staff Writer

30 Jun, 2015 | 8:01 am

காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்றும் மக்களின் சாட்சியங்களை பதிவு செய்யவுள்ளது.

இன்று சாட்சியமளிப்பதற்காக 142 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மூதூர் பிரதேச செயலகத்திலும் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் கடந்த மூன்று தினங்களாக நடைபெற்ற அமர்வுகளின்போது 575 பேரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதனைத் தவிர மேலும் பலர் புதிதாக முறைப்பாடுகளை செய்திருந்தனர்

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா, மூதூர், தம்பலகாமம், கந்தளாய், திருகோணமலை, ஆகிய ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட
காணாமற்போனோரின் உறவினர்களிடம் சாட்சிப் பதிவுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

எவ்வாறாயினும் காணாமற்போனோர் தொடர்பில் சர்வதேச பொறிமுறையின்கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி கடந்த மூன்று தினங்களாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்தியிருந்தனர்

ஆணைக்குழுவின் விசாரணைகள்மீது நம்பிக்கை கொள்ள முடியாது எனவும் அவர்கள் கூறினர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்