ஆட்சிக்கு வருவதன் மூலம் குடும்பத்தாரைக் காப்பாற்ற நினைக்கிறார் மஹிந்த – மனோ கணேசன்

ஆட்சிக்கு வருவதன் மூலம் குடும்பத்தாரைக் காப்பாற்ற நினைக்கிறார் மஹிந்த – மனோ கணேசன்

எழுத்தாளர் Bella Dalima

30 Jun, 2015 | 9:06 pm

சிங்கள மக்களையும் இணைத்துக்கொண்டு குற்றவாளிகளுக்கு எதிராக அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதால் பலர் கைதுசெய்யப்படுவார்கள் என்ற அச்சம் மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஏற்பட்டுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஆட்சிக்கு வருவதன் மூலம் தனது நண்பர்களையும் குடும்பத்தாரையும் காப்பாற்ற முடியும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஸ நினைப்பதாகவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸ இனவாதத்தைத் தூண்டிவிட்டு தமிழர்களையும் முஸ்லிம்களையும் மோதவிட்டு, சிங்களவர்களையும் முஸ்லிம்களையும் மோதவிட்டு தனது ஆட்சியை கொண்டுசெல்வதற்கு தயாராகிவருவதாகவும் மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்