காணாமற்போனோர் தொடர்பில் திருமலையில் இரண்டாவது நாளாக சாட்சியங்கள் பதிவு

காணாமற்போனோர் தொடர்பில் திருமலையில் இரண்டாவது நாளாக சாட்சியங்கள் பதிவு

காணாமற்போனோர் தொடர்பில் திருமலையில் இரண்டாவது நாளாக சாட்சியங்கள் பதிவு

எழுத்தாளர் Staff Writer

28 Jun, 2015 | 11:06 am

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் திருகோணமலை மாவட்டத்திற்கான இரண்டாம் நாளுக்குரிய அமர்வு இன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

மூதூர் பிரதேச செயலகத்தில் சாட்சி விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவிக்கின்றார்.

இன்றைய தினத்திற்கான விசாரணைகளின் நிமித்தம் 250 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மூதூர் பிரதேச செயலகத்தில் நேற்று (27) ஆரம்பமன அமர்வில் சாட்சியமளிப்பதற்காக 179 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த கிண்ணியா, மூதூர்,தம்பலகாமம், கந்தளாய், திருகோணமலை, ஆகிய ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட காணாமற்போனோரின் உறவினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அழைப்பையேற்று வருகை தந்தவர்களில் 159 பேரிடம் நேற்று (27) சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, காணாமற்போனோர் தொடர்பில் இன்றைய தினம் புதிதாக 168 பேரின் முறைப்பாடுகளை ஆணைக்குழு ஏற்றுக்கொண்டுள்ளது.

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அனைத்து மாவட்டங்களிலும் சாட்சி விசாரணைகளை கட்டம் கட்டமாக முன்னெடுத்து வருகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்