உமா ஓயா திட்டத்தினால் பாதிப்படைந்தவர்களுக்கு எதிர்வரும் 2 வாரங்களுக்குள் நட்டஈடு வழங்கத் தீர்மானம்

உமா ஓயா திட்டத்தினால் பாதிப்படைந்தவர்களுக்கு எதிர்வரும் 2 வாரங்களுக்குள் நட்டஈடு வழங்கத் தீர்மானம்

உமா ஓயா திட்டத்தினால் பாதிப்படைந்தவர்களுக்கு எதிர்வரும் 2 வாரங்களுக்குள் நட்டஈடு வழங்கத் தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

28 Jun, 2015 | 2:06 pm

உமா ஓயா திட்டத்தினால் வீடு மற்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள சேதத்திற்கான நட்டஈட்டினை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வழங்கவுள்ளதாக சுற்றாடல் மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மகாவலி திட்டத்தினால் பாதிப்பிற்குள்ளானோர் தொடர்பான மதிப்பீடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க தெரிவிக்கின்றார்.

மதிப்பீட்டு திணைக்கள உத்தியோகஸ்த்தர்களினூடாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மதிப்பீட்டு நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டதன் பின்னர் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்டஈடு வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நட்டஈடு வழங்குவதற்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்ப்பட்டுள்ளதாகவும், சுற்றாடல் மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்