இன்று இரவு 10 மணியிலிருந்து ஹய்லெவல் வீதியில் விசேட போக்குவரத்துத் திட்டம் 

இன்று இரவு 10 மணியிலிருந்து ஹய்லெவல் வீதியில் விசேட போக்குவரத்துத் திட்டம் 

இன்று இரவு 10 மணியிலிருந்து ஹய்லெவல் வீதியில் விசேட போக்குவரத்துத் திட்டம் 

எழுத்தாளர் Staff Writer

28 Jun, 2015 | 3:18 pm

பன்னிபிட்டிய தர்மபால வித்தியாலயத்திற்கு அருகில் பயணிகளுக்கான மேம்பாலம் அமைக்கப்படவுள்ளமையால் இன்று (28) இரவு பத்து மணி தொடக்கம் நாளை (29) அதிகாலை 05 மணிவரை ஹய்லெவல் வீதியில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.

அதற்கமைய கொழும்பிலிருந்து கொட்டாவ மற்றும் அவிசாவளைக்கு பயணிக்கும் வாகனங்கள் பன்னிபிட்டிய மேம்பாலம் சந்தியிலிருந்து இடது பக்கமாக திரும்பி பழைய கொட்டாவ வீதியினூடாக கொட்டாவ நகரை சென்றடைய முடியும்.

அவிசாவளை மற்றும் கொட்டாவையிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்கள் கொட்டாவை நகரிலிருந்து பழைய கொட்டாவ வீதியினூடாக மொரகெட்டிய சந்தியில் இடது பக்கமாக திரும்பி ஹய்லெவல் வீதிக்குள் பிரவேசித்து பயணத்தை தொடர முடியும் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

பன்னிபிட்டிய தர்மபால வித்தியலயத்திற்கு அருகில் நிலவும் கடும் வாகன நெரிசலை குறைக்கும் நோக்குடன் பயணிகளுக்கான மேம்பாலம் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்