ஜெலிபிஷ் மாதிரிகளை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்த நாரா நடவடிக்கை

ஜெலிபிஷ் மாதிரிகளை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்த நாரா நடவடிக்கை

ஜெலிபிஷ் மாதிரிகளை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்த நாரா நடவடிக்கை

எழுத்தாளர் Bella Dalima

27 Jun, 2015 | 9:39 am

தென் மற்றும் மேல் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் இருந்து  பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள ஜெலிபிஷ் மாதிரிகளை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு நாரா என்ற தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜெலிபிஷ் இனத்தைச் சரியான முறையில் அடையாளம் காண்பதற்காகவே மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளதாக நாரா நிறுவனத்தின் ஆய்வாளர் உபுல் லியனகே குறிப்பிட்டார்.

இந்த பரிசோதனையின் ஒருகட்டம் நாரா நிறுவனத்திலும், ஏனைய பரிசோதனைகள் வேறு நிறுவனங்கள் மூலமோ அல்லது வெளிநாட்டிலோ முன்னெடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொல்ஹேன மற்றும் வெலிகம கரையோரங்களில் ஜெலிபிஷ் தொடுகை
தொடர்ந்தும் இடம்பெறுகின்றதா என்பது குறித்து கண்காணித்து
வருவதாக நாரா நிறுவனத்தின் ஆய்வாளர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்