யாழ். நீதிமன்றத்திற்கு சேதமேற்படுத்தியவர்களில் மேலும் 14 பேர் பிணையில் விடுதலை

யாழ். நீதிமன்றத்திற்கு சேதமேற்படுத்தியவர்களில் மேலும் 14 பேர் பிணையில் விடுதலை

யாழ். நீதிமன்றத்திற்கு சேதமேற்படுத்தியவர்களில் மேலும் 14 பேர் பிணையில் விடுதலை

எழுத்தாளர் Staff Writer

26 Jun, 2015 | 1:47 pm

யாழ். நீதிமன்ற வளாகத்திற்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்தவர்களில் 14 பேர் இன்று (26) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு சேதம் விளைவித்தமைக்காக கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 49 பேர் இன்று (26) நீதவான் பெருமாள் சிவகுமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதனையடுத்து 14 பேரை தலா ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான நன்னடத்தை பிணையில் விடுவிப்பதற்கு நீதவான் அனுமதி வழங்கினார்.

அத்துடன் எஞ்சிய 39 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜூலை மாதம் 10 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

யாழ். புங்குடுதீவில் பாடசாலை மாணவி வித்தியா கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து கடந்த மாதம் 20 ஆம் திகதி யாழ் நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களால் நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 135 பேர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களில் சிலர் கட்டம் கட்டமாக நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்