புங்குடுதீவு மாணவி கொலை: இடைக்கால அறிக்கை கையளிப்பு

புங்குடுதீவு மாணவி கொலை: இடைக்கால அறிக்கை கையளிப்பு

புங்குடுதீவு மாணவி கொலை: இடைக்கால அறிக்கை கையளிப்பு

எழுத்தாளர் Bella Dalima

26 Jun, 2015 | 5:04 pm

யாழ். புங்குடுதீவில் பாடசாலை மாணவி வன்புணர்விற்குட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளின் இடைக்கால அறிக்கை யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் குழு இந்த அறிக்கையை இன்று கையளித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்தார்.

எவ்வாறாயினும், விசாரணைகள் இதுவரையில் நிறைவடையவில்லை எனவும், பல்வேறு கோணங்களிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

புங்குடுதீவில் கடந்த மாதம் 13 ஆம் திகதி, பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்யா கடத்திச்செல்லப்பட்டு, துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் 10 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை, புங்குடுதீவு மாணவியின் படுகொலையைக் கண்டித்தும், அவருக்கு நீதி வழங்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்