ஜனாதிபதி ஒருபோதும் நாட்டுப் பிரிஜைகளைக் காட்டிக்கொடுக்க மாட்டார் – சஜித் பிரேமதாஸ

ஜனாதிபதி ஒருபோதும் நாட்டுப் பிரிஜைகளைக் காட்டிக்கொடுக்க மாட்டார் – சஜித் பிரேமதாஸ

எழுத்தாளர் Bella Dalima

26 Jun, 2015 | 5:34 pm

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஸவிற்கும் இடையில் சந்திப்பு இடம்பெறவில்லை என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

திஸ்ஸமஹாராம – சியபலாவெவ கமநல அமைப்பிற்கு நிதி உதவி வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்விலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் என்றும் உடையாத வலுவான அரசியல் பிணைப்பு காணப்படுவதாக இந்நிகழ்வில் சுட்டிக்காட்டிய அமைச்சர் சஜித் பிரேமதாஸ, ஜனாதிபதியால் ஒருபோதும் ஆரம்பத்தை மறந்துவிட முடியாது எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை உறுதி செய்த அனைவரும் நம்பிக்கை இழக்க வேண்டாம் எனவும் அவர் ஒருபோதும் நாட்டுப் பிரிஜைகளைக் காட்டிக்கொடுக்க மாட்டார் எனவும் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்