சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்: விஜேதாச ராஜபக்ஸ தலைமையில் பாதயாத்திரை

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்: விஜேதாச ராஜபக்ஸ தலைமையில் பாதயாத்திரை

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்: விஜேதாச ராஜபக்ஸ தலைமையில் பாதயாத்திரை

எழுத்தாளர் Bella Dalima

26 Jun, 2015 | 5:16 pm

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ தலைமையில் இன்று பாதயாத்திரை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

போதையற்ற நாடு என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பாதயாத்திரை வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக ஆரம்பமாகியது.

இதன்போது கருத்து வெளியிட்ட நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ, ஆசியா , ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு போதைப்பொருளைக் கடத்தும் ஒரு மையமாக இலங்கையைப் பயன்படுத்தும் நிலை இன்று ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இலங்கையின் தென் கடற்பரப்பைப் பயன்படுத்தி இந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல் இடம்பெறுகின்றமையை நீதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்