எரிசக்தியில் இயங்கக்கூடிய வாகனங்களை நோக்கி நகர வேண்டும் – கலாநிதி அப்துல் கலாம்

எரிசக்தியில் இயங்கக்கூடிய வாகனங்களை நோக்கி நகர வேண்டும் – கலாநிதி அப்துல் கலாம்

எழுத்தாளர் Bella Dalima

26 Jun, 2015 | 9:04 pm

எதிர்வரும் 10 ஆண்டுகளுக்குள் எரிசக்தியில் இயங்கக்கூடிய வாகனங்களை நோக்கி நகர வேண்டும் என இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி கலாநிதி அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மின் சக்தி எரிசக்தி அமைச்சு மற்றும் இலங்கை எரிசக்தி அதிகார சபை ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே சிங்ஹா, பாடசாலை அதிபர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்