உருத்திரபுரத்தில் காணாமல் போன குழந்தையை தேடும் பணிகள் தொடர்கிறது

உருத்திரபுரத்தில் காணாமல் போன குழந்தையை தேடும் பணிகள் தொடர்கிறது

உருத்திரபுரத்தில் காணாமல் போன குழந்தையை தேடும் பணிகள் தொடர்கிறது

எழுத்தாளர் Staff Writer

26 Jun, 2015 | 1:35 pm

கிளிநொச்சி, உருத்திரபுரம், எள்ளுக்காடு கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமற்போன மூன்று வயது குழந்தையை தேடி பொலிஸார் தொடர்ந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குழந்தையின் தாயாரிடம் பெற்றுக்கொண்ட பரஸ்பர வாக்குமூலங்களின் பிரகாரம் குழந்தை பணத்திற்காக விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதுதவிர குழந்தை காணாமற்போனமை தொடர்பில் சுமார் ஏழு பேரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிசெய்துள்ளனர்.

குழந்தையின் ஒன்றுவிட்ட சகோதரன் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரை குளத்தில் குளிப்பதற்காக அழைத்துச் சென்றபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து குழந்தையின் பெற்றோரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், குளத்திலும், அதனை அண்மித்த பகுதிகளிலும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், கடற்படையினர் மற்றும் பிரதேச மக்களின் உதவியுடன் குழந்தையை தேடும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

ஆயினும், இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்