2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடாத்த பரிஸ் விண்ணப்பம்

2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடாத்த பரிஸ் விண்ணப்பம்

2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடாத்த பரிஸ் விண்ணப்பம்

எழுத்தாளர் Staff Writer

24 Jun, 2015 | 10:37 am

ஏற்கனவே பல நகரங்கள் ஒலிம்பிக் போட்டியை நடத்தக் கோரி மனு செய்துள்ள நிலையில் இப்போது பிரான்ஸின் தலைநகர் பரிஸும் அந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளது.

2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த விண்ணப்பித்துள்ள பாரிஸ் நகரம், அதற்கு சரியாக நூறாண்டுகளுக்கு முன்னர் 1924ஆம் ஆண்டு அப்போட்டியை நடத்தியது.

அந்த ஆண்டு நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டியை நடத்த வாய்ப்பு கோரி ரோம், பொஸ்டன், ஹாம்பர்க் ஆகிய நகரங்களும் விண்ணப்பித்துள்ளன.

இந்தப் போட்டியில் ஹங்கேரியத் தலைநகர் புடாபெஸ்ட்டும் இணைவது குறித்து பரிசீலித்து வருகிறது.
எனினும் அப்போட்டியை நடத்தக் கோரி விண்ணப்பம் செய்வதற்கு, இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திவரை பதிவு செய்துகொள்ள நேரம் உள்ளது.

அனைத்து விண்ணப்பங்களும் பெறப்பட்ட பின்னர், எந்த நகரத்துக்கு போட்டியை வழங்குவது என்பது குறித்த முடிவை சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் 2017ஆம் ஆண்டு எடுக்கும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்