20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் சிறிய கட்சிகளுக்கு பாதகமாகவே உள்ளது – சரத் பொன்சேகா

20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் சிறிய கட்சிகளுக்கு பாதகமாகவே உள்ளது – சரத் பொன்சேகா

20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் சிறிய கட்சிகளுக்கு பாதகமாகவே உள்ளது – சரத் பொன்சேகா

எழுத்தாளர் Staff Writer

24 Jun, 2015 | 2:04 pm

20 ஆவது அரசியலமைப்புத்  திருத்தம் சிறிய கட்சிகளுக்கு பாதகமாக காணப்படுவதாக ஜனநாயக கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கெக்கிராவயில் நேற்று (24)  நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

மேலும் ஜனநாயக கட்சி போன்ற கட்சிகளுக்கு பாதகத்தை ஏற்படுத்தி பெரிய கட்சிகள் தமது பலத்தை நிலை நாட்டிக் கொண்டு மக்களை நட்டாற்றில் விடும் நிலையே இந்த 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தினால் உண்டாகும் என பொன்சேகா தெரிவித்தார்.

எனவே சிறுபான்மைக் கட்சிகளுக்கு வாக்களிக்கும் 25 இலட்ச மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வண்ணம் 20 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதனையும் பொன்சேகா வலியுறுத்தினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்