போதைப்பொருள் வர்த்தகத்தின் மர்ம இடமாக மாறியுள்ள சிறைச்சாலைகள்

போதைப்பொருள் வர்த்தகத்தின் மர்ம இடமாக மாறியுள்ள சிறைச்சாலைகள்

எழுத்தாளர் Bella Dalima

24 Jun, 2015 | 10:24 pm

ஹெரோய்ன் உள்ளிட்ட போதைப்பொருட்கள் வர்த்தகத்தின் மர்ம இடமாக சிறைச்சாலைகள் மாறியுள்ளதாக கடந்தகாலங்களில் வெளியான தகவல்களுக்கான சாட்சியங்கள் உள்ளன.

கொழும்பை அண்மித்த பகுதிகளிலுள்ள சிறைச்சாலைகளில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

2010 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் ஒன்றரை கிலோகிராம் போதைப்பொருள், சிறைச்சாலை தலைமையக புலனாய்வுப் பிரிவினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உணவு உள்ளிட்ட சில பொருட்களில் மறைத்துவைத்து கொண்டுவருதல் உள்ளிட்ட சில உபாயங்களைக் கண்டுபிடித்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன், சிறைச்சாலை சுவருக்கு மேலாக போதைப்பொருட்களை எறியும் நடைமுறையும் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையில் இதனால் அதிகளவிலான சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

சிறைச்சாலையின் பின்புறமுள்ள சுவருக்கு அருகில் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், அந்த வீடுகளில் வசிக்கும் சிலர் போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலைகளுக்குள் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளமை, சில சிறைச்சாலை அதிகாரிகளின் செயற்பாடுகளைப் பெரிதும் பாதித்துள்ளது.

இந்நிலையில், 2010 ஆம் ஆண்டு முதல் இதுவரை சிறைச்சாலைகள் புலனாய்வுப் பிரிவினால் 29 அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்