பெண்கள், குழந்தைகளைக் கடத்தி தற்கொலைப் படையினராகப் பயன்படுத்துகிறதா போகோ ஹராம்?

பெண்கள், குழந்தைகளைக் கடத்தி தற்கொலைப் படையினராகப் பயன்படுத்துகிறதா போகோ ஹராம்?

பெண்கள், குழந்தைகளைக் கடத்தி தற்கொலைப் படையினராகப் பயன்படுத்துகிறதா போகோ ஹராம்?

எழுத்தாளர் Bella Dalima

24 Jun, 2015 | 5:39 pm

நைஜீரியாவின் மைடுகுரி நகரிலுள்ள மசூதியில் பெண்கள் இருவரால் நடத்தப்பட்ட தற்கொலைக்குண்டு தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மசூதிக்கு அருகிலிருந்த மீன் சந்தை ஒன்றிலிருந்து சென்ற இரண்டு பெண்களால் மசூதியில் தொழுகை மேற்கொண்டிருந்தவர்கள் மீது இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நைஜீரியாவின் போகோ ஹராம் பயங்கவாத அமைப்பின் பிறப்பிடம் மைடுகுரி நகரம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாதத்தில் மாத்திரம் அந்நகரில் 4 தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

இதேவேளை, செவ்வாய்கிழமை 12 வயது மதிக்கத்தக்க சிறுவன் மூலம் வடகிழக்கு நைஜீரியாவில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.

வடகிழக்கு நைஜீரியாவின் யோபே எனும் பகுதியில் உள்ள மார்க்கெட் ஒன்றில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

போகோ ஹராம் பயங்கரவாதிகள், ஏராளமான பெண்களையும், குழந்தைகளையும் கடத்தி வைத்துள்ளனர்.

இந்த நிலையில், அண்மைக்காலமாக அவர்களது பயங்கரவாதத் தாக்குதல்களில் பெண்கள் அதிக அளவில் மனித வெடிகுண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.

கடத்தப்பட்ட பெண்களையும் குழந்தைகளையும் போகோ ஹராம் பயங்கரவாதிகள் தற்கொலைப் படையினராகப் பயன்படுத்துகிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பெரும்பாலும் இத்தகைய தாக்குதலில் ஈடுபடும் பெண்கள், குழந்தைகளின் உடலில் பொருத்தப்பட்டுள்ள குண்டுகள், தொலைவிலிருந்து ரிமோட் மூலம் இயக்கப்படுவது இந்த சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்