பிரதேசவாதமின்றி தமிழ் சமூகம் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் – வீ.இராதாகிருஷ்ணன்

பிரதேசவாதமின்றி தமிழ் சமூகம் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் – வீ.இராதாகிருஷ்ணன்

எழுத்தாளர் Bella Dalima

24 Jun, 2015 | 9:14 pm

பிரதேசவாதமின்றி தமிழ் சமூகம் ஒற்றுமையாக செயற்பட வேண்டுமென கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தின் தொழில்நுட்ப ஆய்வுக்கூடத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோது அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

தொழில்நுட்ப ஆய்வுக்கூடம் திறந்துவைக்கப்பட்டதன் பின்னர், பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த மூன்று மாடி கட்டடத் தொகுதியும் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் வட மாகாண சபையின் உறுப்பினர், வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வவுனியா வடக்கு கல்வி வலய பணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்