தேசியக்கொடியை ஏற்றாமைக்கு மன்னிப்புக் கோருகின்றேன் – வீ. ஆனந்தசங்கரி

தேசியக்கொடியை ஏற்றாமைக்கு மன்னிப்புக் கோருகின்றேன் – வீ. ஆனந்தசங்கரி

எழுத்தாளர் Bella Dalima

24 Jun, 2015 | 6:37 pm

தேசியக்கொடியை அன்று ஏற்றும் சூழல் இருக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி, அதற்காக மன்னிப்புக் கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பளையில் விளையாட்டு மைதானத்தைத் திறந்து வைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினால் விளையாட்டு மைதானத்தின் புனரமைப்புப் பணிகள் நிறைவுசெய்யப்பட்டதை அடுத்து, இன்று காலை மைதானம் திறந்துவைக்கப்பட்டது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம், வீ.ஆனந்த சங்கரி இந்நிகழ்வில் மேலும் தெரிவித்ததாவது;

தேசியக்கொடியை ஏற்றக்கூடிய நிலை இன்னும் சில நாட்களில் வரலாம். காலம் மாறிக்கொண்டு வருகின்றது. ஒரு ஒளிக்கீற்று தெரிகின்றது. இதே இடத்தில் இந்த சிங்கக்கொடியை ஏற்றக்கூடிய வாய்ப்பு எனக்கு இல்லாவிட்டாலும் வேறு நபர்களுக்கு வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. அதற்கு ஏற்ற வகையிலே தான் நாங்கள் செயற்பட்டு வருகின்றோம். ஆகவே, தேசியக்கொடியை மதியாதவன் தேசபக்தனாக இருக்க முடியாது. ஆனால், எங்களுடைய அன்றைய சூழ்நிலையில் தேசியக்கொடியை ஏற்றக்கூடிய அளவுக்கு நிலைமை சரியாக இருக்காத படியினால் நான் அதை செய்யவில்லை. அதுக்கு நான் மன்னிப்புக் கோருகின்றேன்.

என்றார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்