தனது குட்டிகளை உண்ண வந்த பாம்பை சண்டையிட்டு விரட்டிய முயல்(VIDEO)

தனது குட்டிகளை உண்ண வந்த பாம்பை சண்டையிட்டு விரட்டிய முயல்(VIDEO)

எழுத்தாளர் Staff Writer

24 Jun, 2015 | 12:39 pm

தனது குட்டிகளை உண்ண வந்த பாம்புடன் கடுமையாகப் போராடி அவற்றை மீட்ட முயல் குறித்த ஒரு பரபரப்பு வீடியோ YouTube இனை கலக்கி வருகின்றது. மனிதர்களை விட பாசத்தில் உயர்ந்தவை விலங்குகள்.பல நேரங்களில் நாம் அதைக் கண்ணாரக் கண்டுள்ளோம்.

இந்த நிலையில் தனது குட்டிகளைத் தின்ன வந்த பாம்புடன் கடுமையாகப் போராடி அதை மீட்டுள்ளது ஒரு முயல். அந்த முயல், பாம்புடன் தைரியமாக போரிட்ட காட்சி குறித்த வீடியோ யூடியூபில் பலரால் பார்க்கப்பட்டுள்ளது.

வழக்கமாக கீரியும், பாம்பும் சண்டை போடுவதைப் பார்த்திருப்போம். ஆனால் இதில் முயலும், பாம்பும் அப்படி ஒரு சண்டை போடுகின்றன. இதை இதுவரை பல இலட்சம் பேர் பாரத்துள்ளனர்.

இந்த காணொளியில் மயிர்க்கூச்செறிய வைக்கிறது தாய் முயலின் தைரியமான அந்த சண்டை.

ஒரு கட்டத்தில் முயலின் கடியிலிருந்து தப்பிக்க முயன்று தப்பி ஓடுகிறது பாம்பு. புல் தரை வழியாக பாய்ந்தோடும் அது சுவர் ஒன்றின் வழியாக ஏறி வெளியேறப் பார்க்கிறது. ஆனால் விடாத தாய் முயல் அந்த பாம்பின் வாலைப் பிடித்து கீழே இழுத்துப் போடுகிறது. மறுபடியும் ஒரு உக்கிரச் சண்டையில் குதிக்கிறது.

எனினும் இந்த சம்பவம் எங்கே நடைபெற்றது எனத் தெரியவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்