கோட்டாபய ராஜபக்ஸ தொடர்புபட்டுள்ள மிக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மங்கள சமரவீர கருத்து 

கோட்டாபய ராஜபக்ஸ தொடர்புபட்டுள்ள மிக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மங்கள சமரவீர கருத்து 

கோட்டாபய ராஜபக்ஸ தொடர்புபட்டுள்ள மிக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மங்கள சமரவீர கருத்து 

எழுத்தாளர் Bella Dalima

24 Jun, 2015 | 10:41 pm

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தொடர்புபட்டுள்ள மிக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்டார்.

இதன்போது, கோட்டாபய ராஜபக்ஸ பாதுகாப்புச் செயலாளர் என்ற வகையில், தரகு பெற்றுக்கொண்டே, யுத்தத்தினை ஆரம்பித்ததாகவும்
பாரிய தேசத்துரோக மோசடியான மிக் கொடுக்கல் வாங்கல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர்களின் பிரஜாவுரிமையைக் கூட இழக்க நேரிடும் எனவும் அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.

அத்துடன், நான்கு விமானங்களைக் கொள்வனவு செய்வதற்காக பெலீசிமா என்ற நிறுவனத்திற்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனத்தின் விலாசம் இங்கிலாந்தில் உள்ளது எனவும் குறிப்பிட்ட அமைச்சர், அந்த விலாசத்தில் அப்படியொரு நிறுவனம் இல்லை எனவும் அந்த இடத்தில் இலங்கையில் இருப்பதுபோன்று டெலி ஷொப் ஒன்றே உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், இந்த கொடுக்கல் வாங்கல் இடம்பெற்ற ஒரு வாரத்திற்கு முன்னர் பிரிட்டிஷ் வர்ஜின் ஐலண்ட் என்ற அதிகளவில் கருப்புப் பணத்தை பதுக்கிவைக்கும் தீவுகளில் ஆகஸ்ட் மாதமளவில் குறித்த நிறுவனம் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, அரசாங்கமொன்று மற்றுமொரு அரசாங்கத்துடன் கொடுக்கல் வாங்கல் செய்வதாயின் திருட்டு நிறுவனத்திற்கு பணம் அனுப்பப்பட்டமைக்கான காரணம் என்னவெனவும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்