காணியை மீட்டுத் தருமாறு வவுனியா தெற்கு பிரதேச செயலகத்தின் கூரை மீதேறிய முதியவர்

காணியை மீட்டுத் தருமாறு வவுனியா தெற்கு பிரதேச செயலகத்தின் கூரை மீதேறிய முதியவர்

எழுத்தாளர் Bella Dalima

24 Jun, 2015 | 9:01 pm

தமது காணியை ஒப்படைக்குமாறு கோரி, வவுனியா தெற்கு பிரதேச செயலகத்தின் கூரையில் ஏறி முதியவர் ஒருவர் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தார்.

வவுனியா, நெடுங்குளம் – மினிமறிச்சகுளம் பகுதியில் தனது தந்தைக்கு ஒரு ஏக்கர் வயல் காணி இருப்பதாக கவனயீர்ப்பில் ஈடுபட்டவர் தெரிவித்தார்.

அந்தக் காணி தந்தைக்குப் பின்னர், தனக்கு என உறுதியில் எழுதப்பட்டுள்ளதாகவும் அதற்கான ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஆனாலும், வவுனியா தெற்கு பிரதேச செயலகத்தினர் வேறொருவருக்கு அந்தக் காணியை வழங்கியுள்ளதாகவும், அதனை மீட்டுத் தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனாலும், இந்தக் குற்றச்சாட்டு பொய்யானது என பிரதேச செயலக ஊழியர்கள் தெரிவித்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்