அனுப்பிய ஈமெயிலை திரும்பப் பெறும் வசதி ஜிமெயிலில் அறிமுகம்

அனுப்பிய ஈமெயிலை திரும்பப் பெறும் வசதி ஜிமெயிலில் அறிமுகம்

அனுப்பிய ஈமெயிலை திரும்பப் பெறும் வசதி ஜிமெயிலில் அறிமுகம்

எழுத்தாளர் Bella Dalima

24 Jun, 2015 | 4:36 pm

ஈமெயில் ஒன்றினை அனுப்பிய பிறகு குறிப்பிட்ட நேரத்திற்குள் அதை திரும்பப் பெறும் வசதியை ஜிமெயில் அறிமுகம் செய்துள்ளது.

யாருக்காவது தவறுதலாக அனுப்பியிருந்தாலோ, திருத்தங்களை மேற்கொள்ள விரும்பினாலோ அல்லது அனுப்பிய பின்னர் அந்த ஈமெயிலை இரத்து செய்ய விரும்பினாலோ குறிப்பிட்ட நேரத்திற்குள் அனுப்பிய ஈமெயிலை திரும்பிப் பெற முடியும்.

இதற்கென தற்போது ஜிமெயிலில் அன் செண்ட் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது அனுப்பிய மெயிலை திரும்பப் பெறும் வசதி.

ஜிமெயிலைப் பயன்படுத்தும் போது மெயிலை அனுப்பிய பிறகு, அன் செண்ட் (unsend) வசதி எட்டிப்பார்க்கும். மெயிலில் ஏதேனும் தவறு இருப்பதாக நினைத்தால் அல்லது அதை அனுப்ப வேண்டாம் என நினைத்தால் உடனே அந்த பட்டனை கிளிக் செய்தால், அனுப்பப்படாமல் திரும்பி வந்துவிடும். அதன் பிறகு அந்த மெயிலில் திருத்தம் செய்யலாம் அல்லது டெலிட் செய்துவிடலாம் என்று கூகுள் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்