அகதிகளாக இந்தியாவிற்குச் சென்ற 46 பேர் நாடு திரும்பினர்

அகதிகளாக இந்தியாவிற்குச் சென்ற 46 பேர் நாடு திரும்பினர்

எழுத்தாளர் Staff Writer

24 Jun, 2015 | 1:36 pm

இலங்கையில் இருந்து அகதிகளாக இந்தியாவிற்கு சென்று தமிழக முகாம்களில் வசித்து வந்த மேலும் 46 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

கடந்த ஒன்றரை மாதகாலத்தில் தமிழகத்தில் அகதிகளாக வசித்து வந்த இலங்கையர்கள் நாடு திரும்பிய இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

திருச்சியில் இருந்து புறப்பட்ட யூ.எல். 132 விமானத்தில் நாடு திரும்பிய அகதிகளில் 18 பெண்கள் அடங்குகின்றனர்.

இவர்கள் திருச்சி ,புதுக்கோட்டை,சேலம்,ராமநாதபுரம்,விருதுநகர்,தூத்துக்குடி மற்றும் சிவ கங்கை மாவட்டங்களில் உள்ள முகாம்களில் தங்கியிருந்தவர்கள் என த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் பல்வேறு சந்தர்பங்களில் இவர்கள் படகு மூலம் சென்று இந்தியாவில் தஞ்சமடைந்திருந்தனர்.

நாடு திரும்பிய இலங்கை அகதிகள் தொடர்பில் தமிழகத்தில் எவ்வித குற்றச் செயல்களும் பதிவாகவில்லை என தெரிவி்க்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் நடுப்பகுதியிலும் 41 தமிழ் அகதிகள் தமிழகத்தில் இருந்து நாடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்