News1st Online Academy‬ இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது

News1st Online Academy‬ இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

23 Jun, 2015 | 7:06 am

இலங்கையர்களுக்கு புதிய அனுபவத்தை பெற்றுக்கொடுக்கும் வகையில் News1st Online Academy திட்டம் இன்று (23) அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ளது.

இலங்கை மக்கள் மத்தியில் ஊடகத்துறைசார் அறிவை மேம்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படுகின்ற Newsfirst Online Academy திட்டத்தின்கீழ் இணையத்தளம் ஊடாக பாடநெறிகளை தொடர்வதற்கான வாய்ப்பு மக்களுக்கு கிட்டவுள்ளது.

மஹியங்கனை தேசியக் கல்லூரியில் இந்த திட்டம் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது.

மேலும் News1st Online Academy திட்டத்தின் நோக்கம் குறித்து கெபிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளர் ​ஷெவான் டெனியல் தெரிவிக்கையில்..

[quote]கல்வி என்பது அனைவருக்கும் தேவையானது, அந்த வகையில் நியூஸ்பெஸ்ட் என்ற வகையில் எம்மிடம் உள்ள வளங்களைக் கொண்டு இலங்கை மக்களுக்கு எவ்வாறு கல்வி அறிவைப் பெற்றுக்கொடுக்கலாம் என சிந்தித்தோம். இதன் அடிப்படையிலேயே இணையத்தளம் ஊடாக News1st Online Academy திட்டத்தை ஆரம்பிக்கின்றோம்.இந்த திட்டத்தின்கீழ் இலங்கையிலுள்ள எவரும் எமது இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலம் ஊடகத்துறை சார்ந்த பாடநெறியை இலகுவாக கற்க முடியும். பாடநெறியை பூர்த்தி செய்பவர்கள் பரீட்சையில் தோற்றி சான்றிதழ் ஒன்றையும் பெற்றுக்கொள்ள முடியும். இந்த சான்றிதழ் மிகவும் பெறுமதி வாய்ந்ததாக அமையும் என நம்புகின்றோம். ஏனெனில் ஊடகத்துறையில் நீண்டகால அனுபவம் உள்ளவர்களே இந்த பாடநெறியை கற்பிக்கின்றனர்[/quote]

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்