20 ஆவது அரசியலமைப்புத்  திருத்தம் தொடர்பிலான ஒத்திவைப்பு விவாதம் இன்று

20 ஆவது அரசியலமைப்புத்  திருத்தம் தொடர்பிலான ஒத்திவைப்பு விவாதம் இன்று

20 ஆவது அரசியலமைப்புத்  திருத்தம் தொடர்பிலான ஒத்திவைப்பு விவாதம் இன்று

எழுத்தாளர் Staff Writer

23 Jun, 2015 | 8:54 am

இலங்கையின் தேர்தல் முறைமை மற்றும் அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று (23) ஒத்திவைப்பு விவாதம் நடைபெறவுள்ளது.

இந்த விவாதம் நாளையும் இடம்பெறவுள்ளதாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தின்போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இன்று ஒத்திவைப்பு விவாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் பிரதி சபாநாயகர் கூறினார்.

20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் விவாதம் நடத்தப்படவுள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டிருந்தாலும் தேர்தல் திருத்தம் குறித்து விவாதம் நடத்தப்படவேண்டும் என கட்சி தலைவர்களின் கூட்டத்தின்போது இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதற்கமைய சபாநாயகர் தலைமையில் இன்று (23) பிற்பகல் ஒரு மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்