ஹெரோய்ன் கடத்த முற்பட்ட பாகிஸ்தான் பிரஜை கைது

ஹெரோய்ன் கடத்த முற்பட்ட பாகிஸ்தான் பிரஜை கைது

ஹெரோய்ன் கடத்த முற்பட்ட பாகிஸ்தான் பிரஜை கைது

எழுத்தாளர் Staff Writer

23 Jun, 2015 | 10:25 am

சுமார் 3 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோய்ன் போதைப் பொருள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரஜை ஒருவரால் நாட்டிற்குள் இந்த போதைப் பொருள் கடத்த முற்பட்ட வேளையில் சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட ஹெரோய்ன் 390 கிராம் நிறையுடையது என சுங்க திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் லெஸ்னி காமினி தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர்  நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லெஸ்னி காமினி தெரிவித்தார்

ஹெராய்ன் போதைப் பொருளை மீட்பதற்காக வைத்தியசாலையில் சந்தேக நபர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுமார் 34 ஹெரோய்ன் மாத்திரைகளை சந்தேக நபர் விழுங்கியுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்