யாழில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

யாழில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

எழுத்தாளர் Bella Dalima

23 Jun, 2015 | 9:24 pm

யாழ்ப்பாணம், மீசாலை பகுதியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், மீசாலை வடக்கு – வயற்கரைப் பிரதேசத்தில் இந்த சட்ட விரோத கசிப்பு உற்பத்தி நிலையத்தை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலை அடுத்து நேற்றிரவு 8 மணியளவில் பொலிஸார் சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இங்கு 6 பீப்பாய்களில் 27 ஆயிரம் லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் பெருந்தொகையான உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சாவகச்சேரி பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரியின் தலைமையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

யாழ். மாவட்டத்தில் அண்மைக்காலங்களில் முற்றுகையிடப்பட்ட மிகப்பெரிய சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் இதுவென பொலிஸார் தெரிவித்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்