மக்களின் பணத்தில் அரசியல்வாதிகள் சுகபோகம் அனுபவிப்பதை நிறுத்த வேண்டும் – சரத் பொன்சேகா

மக்களின் பணத்தில் அரசியல்வாதிகள் சுகபோகம் அனுபவிப்பதை நிறுத்த வேண்டும் – சரத் பொன்சேகா

மக்களின் பணத்தில் அரசியல்வாதிகள் சுகபோகம் அனுபவிப்பதை நிறுத்த வேண்டும் – சரத் பொன்சேகா

எழுத்தாளர் Staff Writer

23 Jun, 2015 | 1:49 pm

நாத்தாண்டியா மகாவெவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிற்கு ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்வின் போது  நாட்டின் முன்னேற்றம் தொடர்பில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கருத்து தெரிவித்திருந்தார்.

வளர்ச்சியடைந்த நாடு எனில் மக்கள் ஆட்சியில் அரசியல்வாதிகள் தலையிட முடியாது. மக்களின் பணத்தை திருடி வாழ முடியாது. மக்களின் பணத்தில் அரசியல் வாதிகள் சுகபோகம் அனுபவிப்பதை நிறுத்த வேண்டும்  என இதன் போது சரத் பொன்சேகா தெரிவித்தார்.

மேலும் ஒரு தொழில்வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்கு அரசியல்வாதியின தலையீடு அவசியம் எனில் அந்த நாட்டில் சுதந்திரம் இல்லை எனவும் பிள்ளைகளை பாடசாலையில் சேர்ப்பதற்கு அரசியல்வாதியின் உதவி தேவை எனில் அந்த நாட்டில் சுதந்திரம் இல்லை உங்களுக்கு தெரியாமல் உங்களை அரசியல்வாதிகள் அடிமைகளாக்குகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்