போதைப்பொருள் வர்த்தகமும் பிரதான நுழைவாயில்களும்!

போதைப்பொருள் வர்த்தகமும் பிரதான நுழைவாயில்களும்!

எழுத்தாளர் Bella Dalima

23 Jun, 2015 | 9:36 pm

கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகம் ஆகிய நுழைவாயில்கள் ஊடாக ஹெரோயின், கேரளா கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் நாட்டிற்குள் கொண்டுவரப்படுவதுடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் சுங்கத் திணைக்களத்தினால் அவை கைப்பற்றப்பட்டிருந்தன.

எனினும், போதைப்பொருள் வர்த்தகர்கள் தொடர்ந்தும் இதனை போதைப்பொருள் கொண்டுவரும் மார்க்கமாகப் பயன்படுத்துகின்றமை, நேற்றைய தினம் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளிலிருந்து புலனாகிறது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் நேற்று (22) மற்றுமொரு பாகிஸ்தான் பிரஜை கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த பாகிஸ்தான் பிரஜையின் வயிற்றிலிருந்து 390 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள பிரதான சர்வதேச நுழைவாயிலான விமான நிலையத்தில் ஸ்கேன் இயந்திரம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப இயந்திரங்கள் உள்ளன.

எனினும், ஹெரோயின் போன்ற போதைப்பொருட்களை அவற்றின் ஊடாக கண்டுகொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.

எனினும், போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான சுற்றிவளைப்புக்களை முன்னெடுக்கும் போது நம்பிக்கைத்தன்மை முக்கியமானது என்பதே அதிகாரிகளின் எண்ணமாகவுள்ளது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இலஞ்சம் பெறுகின்றமை மற்றும் பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கின்றமை போன்ற விடயங்கள் குறித்து கடந்த ஜனவரி மாதம் நியூஸ்பெஸ்ட் வெளியிட்டிருந்த காணொளி மூலம் அங்குள்ள பாதுகாப்புக் கட்டமைப்பு தொடர்பில் கேள்வி எழுகிறது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்