ஒபாமாவிடம் மன்னிப்புக் கோரிய இஸ்ரேல் அமைச்சரின் மனைவி

ஒபாமாவிடம் மன்னிப்புக் கோரிய இஸ்ரேல் அமைச்சரின் மனைவி

ஒபாமாவிடம் மன்னிப்புக் கோரிய இஸ்ரேல் அமைச்சரின் மனைவி

எழுத்தாளர் Bella Dalima

23 Jun, 2015 | 4:41 pm

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை விமர்சித்து ட்விட்டரில் வெளியிட்ட கருத்தை வாபஸ் பெற்ற இஸ்ரேல் அமைச்சரின் மனைவி, தனது கருத்துக்கு மன்னிப்புக் கோரியுள்ளார்.

இஸ்ரேல் உள்துறை அமைச்சர் சில்வன் ஷலோனின் மனைவி
ஜூடி மோசஸ், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகின்றார்.

சுமார் 74,400 பேர் பின்தொடரும் தனது ட்விட்டர் கணக்கில் இரு தினங்களுக்கு முன்பு, “ஒபாமா காபி என்றால் என்ன தெரியுமா? கருப்பாக மற்றும் வலுவில்லாமல் இருக்கும்” என்று ட்விட் செய்திருந்தார்.

இதற்கு பலரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இன ரீதியாக விமர்சிப்பதாக ஜூடிக்கு எதிராகக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து தனது ட்விட்டர் செய்தியை திரும்பப்பெற்ற ஜூடி, இதற்கு மன்னிப்புக் கேட்டு ட்விட்டரில் செய்தி வெளியிட்டார். மன்னிப்புக் கோருவதாக ஒபாமாவிற்கும் நேரடியாக ட்விட்டர் செய்தியை வெளியிட்டார்.

தான் வெளியிட்ட செய்தி, தேவையில்லாத, பொருத்தமில்லாத ஒருவர் தெரிவித்த நகைச்சுவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட தலைவர்கள் குறித்தும் இதற்கு முன்பு கருத்துத் தெரிவித்து சர்ச்சையில் சிக்கியவர் ஜூடி என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்