உணவு விஷமடைந்ததால் சீதாவக்கையில் உள்ள தொழிற்சாலை ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதி

உணவு விஷமடைந்ததால் சீதாவக்கையில் உள்ள தொழிற்சாலை ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதி

உணவு விஷமடைந்ததால் சீதாவக்கையில் உள்ள தொழிற்சாலை ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதி

எழுத்தாளர் Staff Writer

23 Jun, 2015 | 1:36 pm

சீதாவக்கை கைத்தொழில் வலயத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் உணவு விஷமடைந்ததன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (23) காலை இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் கவலைக்கிடமான நிலையில் இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பெருமளவானோர் குணமடைந்த நிலையில் திரும்பியுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்