இலங்கை அடைந்துள்ள சமாதான சூழ்நிலை ஜனநாயக உலகிற்கு சிறந்த முன்மாதிரி – லூய்ஸ் W.M. பியட்

இலங்கை அடைந்துள்ள சமாதான சூழ்நிலை ஜனநாயக உலகிற்கு சிறந்த முன்மாதிரி – லூய்ஸ் W.M. பியட்

இலங்கை அடைந்துள்ள சமாதான சூழ்நிலை ஜனநாயக உலகிற்கு சிறந்த முன்மாதிரி – லூய்ஸ் W.M. பியட்

எழுத்தாளர் Bella Dalima

23 Jun, 2015 | 10:04 pm

இந்த வருடத்தின் ஜனவரி 08 ஆம் திகதிக்கு பின்னர் இலங்கை அடைந்த சமாதான சூழ்நிலையானது ஜனநாயக உலகிற்கு சிறந்த முன்மாதிரியாகும் என நெதர்லாந்து தூதுவர் லூய்ஸ் W.M. பியட் தெரிவித்துள்ளார்.

இதனை ஏற்படுத்திய பெருமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சாருமென நெதர்லாந்து தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது சேவைக் காலத்தை நிறைவு செய்துகொண்டு தாய் நாட்டை நோக்கிப் பயணிப்பதற்குத் தயாராகியுள்ள நெதர்லாந்து தூதுவர் இன்று பிற்பகல் ஜனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடியபோதே இந்தத் தகவலைக் கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் சுகாதாரத்துறைக்கு நெதர்லாந்து வழங்கும் உதவிகளுக்கு அந்நாட்டு தூதுவரிடம் ஜனாதிபதி நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இதனிடை​யே, அடுத்த மாதம் சேவையை நிறைவு செய்யவுள்ள நோர்வே தூதுவர் கிறேடா லோஷனும் இன்று பிற்பகல் ஜனாதிபதியை சந்தித்தார்.

வடக்கு மற்றும் தெற்கிற்கான தமது விஜயத்தின் போது அங்குள்ள மக்களிடம் சுதந்திரம் மற்றும் மீள் எழுச்சியைக் காணக்கூடியதாய் இருந்ததாக நோர்வே தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது நாட்டிலுள்ள அனைத்து மக்களும் நம்பிக்கை கொண்டுள்ளமையை அவதானிக்க முடிவதாகவும் நோர்வே தூதுவர் கிறேடா லோஷன் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்