இறுக்கமான ஜீன்ஸ் அணிந்தால் நரம்பியல் பாதிப்பு ஏற்படும்!

இறுக்கமான ஜீன்ஸ் அணிந்தால் நரம்பியல் பாதிப்பு ஏற்படும்!

இறுக்கமான ஜீன்ஸ் அணிந்தால் நரம்பியல் பாதிப்பு ஏற்படும்!

எழுத்தாளர் Bella Dalima

23 Jun, 2015 | 6:21 pm

இறுக்கமான ஜீன்ஸ் அணிந்ததன் காரணமாக கால்கள் உணர்விழந்து அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவர் மயங்கி வீழ்ந்துள்ளார்.

இதனையடுத்து, இறுக்கமான ஜீன்ஸ் அணிவதால் நரம்பியல் பாதிப்பு ஏற்படுவதைக் கண்டறிந்துள்ளதாக அவுஸ்திரேலிய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வீடு மாறும் உறவினர் ஒருவருக்கு உதவச் சென்ற குறித்த பெண்,
இறுக்கமான ஜீன்ஸ் அணிந்து பல மணி நேரம் முழங்கால்களை மடக்கி உட்கார்ந்துள்ளார்.

இதனால் அவரது கால்களின் கீழ்ப்பகுதி உணர்விழந்துள்ளது. இதனையடுத்து அவர் மயங்கி வீழ்ந்துள்ளார்.

அவரது கால்களின் கீழ்ப்பகுதி வீங்கியிருந்ததால் அவர் அணிந்திருந்த ஜீன்ஸை கழற்ற முடியாமல் வெட்டி எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பின்னர் அவருக்கு நான்கு நாட்களுக்கு நரம்பூசி மூலம் மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

அவர் அணிந்திருந்த இறுக்கமான ஜீன்ஸ், அவரது கால்களுக்கான இரத்த ஓட்டத்தைத் தடுத்து பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.

கால் தசைகள் மற்றும் நரம்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

ஜர்னல் ஆப் நியூராலஜி, நியூரோசர்ஜரி மற்றும் சைக்கியாட்ரி போன்ற மருத்துவ சஞ்சிகைகளில் இது குறித்த மருத்துவர்களின் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்