அர்ஜூன் மகேந்திரன் கோப் குழுவிடம் வாக்குமூலம்

அர்ஜூன் மகேந்திரன் கோப் குழுவிடம் வாக்குமூலம்

அர்ஜூன் மகேந்திரன் கோப் குழுவிடம் வாக்குமூலம்

எழுத்தாளர் Bella Dalima

23 Jun, 2015 | 5:38 pm

வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் கோப் குழுவிற்கு இன்று மீண்டும் அழைக்கப்பட்டிருந்தார்.

முறிகள் விநியோகத்தில் மத்திய வங்கியின் ஆளுனர் மோசடி செய்திருந்ததாகவும், அதனால் அவரை பணி நீக்குமாறு கோரியும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை சபாநாயகரால் ஆராய்ந்து பார்க்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இந்தக் குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணை கோப் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

விசாரணைக்கு அமைய, மத்திய வங்கியின் ஆளுனரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளும் பணிகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளதாக கோப் குழுவின் தலைவர் டியூ குணசேகர தெரிவித்தார்.

விசாரணை அறிக்கை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்