அரச அதிகாரியை மாற்ற முடியாதவர்கள் அரசியல் தீர்வைக் காண்பது எவ்வாறு – சி.தவராசா கேள்வி

அரச அதிகாரியை மாற்ற முடியாதவர்கள் அரசியல் தீர்வைக் காண்பது எவ்வாறு – சி.தவராசா கேள்வி

எழுத்தாளர் Bella Dalima

23 Jun, 2015 | 9:55 pm

ஓர் அரச அதிகாரியையே மாற்ற முடியாத சூழலில் அரசியல் தீர்வைக் காண்பது எவ்வாறென வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

வடக்கு மாகாண சபையின் 31ஆவது அமர்வு இன்று நடைபெற்றபோதே அவர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.

இதேவேளை, வவுனியா மாவட்ட அரச அதிபரை இடமாற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்கு இதுவரை நடவடிக்கை எடுக்காமையைக் கண்டித்து மாகாண சபை உறுப்பினர்கள் கதவடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடமாகாண சபையின் இன்றைய அமர்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரின் இடமாற்றம் தொடர்பில் விவாதம் இடம்பெற்றது.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்