யாழில் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்ட 15 பேர் விளக்கமறியலில்

யாழில் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்ட 15 பேர் விளக்கமறியலில்

யாழில் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்ட 15 பேர் விளக்கமறியலில்

எழுத்தாளர் Staff Writer

21 Jun, 2015 | 10:56 am

யாழ். கொடிகாமம் பகுதியில் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்ட 15 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை சாவகச்சேரி பதில் நீதவான் எஸ். கணபதிபிள்ளை முன்னிலையில் நேற்று (20) மாலை ஆஜர்படுத்திய போது அடுத்த மாதம் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பெண்கள் உள்ளிட்ட 15 சந்தேகநபர்களும் நேற்று (20) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

சட்டவிரோத மதுபான உற்பத்தி செய்யப்பட்ட இடமொன்றை சுற்றிவளைக்க சென்ற பொலிஸார் மீது சந்தேகநபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

பத்து பெண்களும் 05 ஆண்களுமே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்