மன்னாரில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

மன்னாரில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

மன்னாரில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

எழுத்தாளர் Staff Writer

21 Jun, 2015 | 10:33 am

மன்னார் அடம்பன் முல்லிக்கணடல் பகுதியில் கூரிய ஆயுதத்தால் குத்தி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் நேற்று (21) கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியை சேர்ந்த ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கொலையில் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்