ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது – எம்.கே.டி.எஸ். குணவர்தன

எழுத்தாளர் Staff Writer

21 Jun, 2015 | 8:50 am

காணி உறுதியற்ற சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கடந்த காலத்திற்குள் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக காணி அமைச்சு தெரிவித்துள்ளது.

23 மாவட்டங்களிலுள்ளவர்களுக்கு வெவ்வேறு காணி உறுதிப்பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் ஆலோசனைகளுக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

மாகாண அமைச்சு மற்றும் பிரதேச செயலகங்களினூடாக பெற்றுக் கொள்ளப்பட்ட தகவல்களுக்கமைய காணி உறுதிப்பத்திரங்கள் தொடர்ந்தும் விநியோகிக்கப்படுவதாகவும் அமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்தன தெரிவித்துள்ளார்

கடந்த அரசாங்கத்தினூடாக பணம்படைத்தவர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் தங்களின் குடும் உறவுகளுக்கும் காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும், அப்பாவி மக்களுக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படவில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்