பண்டாரவளையில் உமாஓயா திட்டத்தினால் பாதிப்படைந்தவர்கள் ஆர்ப்பாட்டம்

பண்டாரவளையில் உமாஓயா திட்டத்தினால் பாதிப்படைந்தவர்கள் ஆர்ப்பாட்டம்

பண்டாரவளையில் உமாஓயா திட்டத்தினால் பாதிப்படைந்தவர்கள் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

21 Jun, 2015 | 1:38 pm

உமாஓயா திட்டத்தினால் பாதிப்பிற்குள்ளான சிலர் நட்டஈடு வழங்குமாறு கோரி பண்டாரவளை நகரில் இன்று (21) முற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பண்டாரவளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சுமார் ஆறு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

உமாஒயா திட்டம் காரணமாக தமது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்

மக்களின் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்கவிடம் வினவியபோது, உமாஒயா திட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் எட்டு மதிப்பீட்டாளர்கள் தற்போது
அறிக்கை தயாரித்து வருவதாக கூறினார்.

மதிப்பீட்டுப் பணிகள் நிறைவுபெற்றதும் எவருக்கும் அநீதி ஏற்படாத வகையில் நட்டஈடு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, மக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் இன்றைய ஆர்ப்பாட்டத்தை நடத்துமாறு பண்டாரவளை நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

நீதிமன்ற உத்தரவை இன்று (21) முற்பகல் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அறிவித்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்