விரைவில் தந்தையுடன் இணைந்து நடிக்கவுள்ளார் ஸ்ருதிஹாசன்

விரைவில் தந்தையுடன் இணைந்து நடிக்கவுள்ளார் ஸ்ருதிஹாசன்

விரைவில் தந்தையுடன் இணைந்து நடிக்கவுள்ளார் ஸ்ருதிஹாசன்

எழுத்தாளர் Staff Writer

19 Jun, 2015 | 1:09 pm

ஸ்ருதிஹாசன்  நடிக்க வந்தபோதே கேட்கப்பட்ட கேள்வி, எப்போது அப்பா கமலுடன் இணைந்து நடிக்க போகிறீர்கள் என்பதுதான்.

சந்தர்ப்பம் வந்தால் நிச்சயமாக நடிப்பேன், கதை அமைய வேண்டுமே. அப்பா என்பதற்காக நடிக்க முடியாது, எனக்கேற்ற கதாபாத்திரம் வேண்டும் என்றெல்லாம் பதிலளித்துக் கொண்டிருந்த ஸ்ருதி, முதல்முறையாக விரைவில் அப்பாவுடன் இணைந்து நடிப்பேன் என்று கூறியிருக்கிறார்.

அப்பாவுடன் இணைந்து நடிக்க ஆசையாக உள்ளது. விரைவில் அது நடக்கும் என கூறியுள்ளார். எந்தப் படம், எந்த மொழி என்றெல்லாம் தெரியவில்லை. சைப் அலிகானை வைத்து கமல் இந்தியில் இயக்கும் படமாக இருக்கலாம் என்று ஆருடம் கூறுகிறார்கள்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்