மனித உணர்ச்சிகளை புரிந்து கொள்ளக் கூடிய  இதயத்துடன்  ரோபோ அறிமுகம்

மனித உணர்ச்சிகளை புரிந்து கொள்ளக் கூடிய இதயத்துடன் ரோபோ அறிமுகம்

மனித உணர்ச்சிகளை புரிந்து கொள்ளக் கூடிய இதயத்துடன் ரோபோ அறிமுகம்

எழுத்தாளர் Staff Writer

19 Jun, 2015 | 12:06 pm

மனித உணர்ச்சிகளை புரிந்து கொள்ளும் வகையில் இதயத்துடன் கூடிய புதிய ரோபோ ஒன்றை ஜப்பான் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

பெப்பர் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ரோபோவை ஜப்பானைச் சேர்ந்த பேங் என்னும் ரோபோ தயாரிக்கும் நிறுவனம் தயாரித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவும், உணர்ச்சிகளை அறியும் புதிய தொழில்நுட்பமும் இதில் பயனப்படுத்தப்பட்டு இருப்பதால் ஒருவரின் அசைவுகள், உணர்ச்சி வெளிபாடுகள் மற்றும் குரல் தொனிகள் போன்றவற்றை பெப்பரால் அறிந்து கொள்ள முடியும் என்பதே இதன் சிறப்பு ஆகும்.

இதன் விற்பனை தற்போது ஜப்பானில் தொடங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அந்நிறுவனம் அடுத்த ஆண்டுகளில் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் என்றும் கூறியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்