பிரதி பொலிஸ் மாஅதிபர்கள் இருவருக்கு பதவி உயர்வு

பிரதி பொலிஸ் மாஅதிபர்கள் இருவருக்கு பதவி உயர்வு

பிரதி பொலிஸ் மாஅதிபர்கள் இருவருக்கு பதவி உயர்வு

எழுத்தாளர் Staff Writer

19 Jun, 2015 | 1:54 pm

பிரதி பொலிஸ் மாஅதிபர்களான ரவி வைத்தியாலங்கார மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோருக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர்களாக பதவியுர்வு வழங்கப்பட்டுள்ளது.

வெற்றிடங்களை பூர்த்திசெய்யும் வகையில், அமைச்சரவையின் அனுமதியுடன், தொழில்சார் அனுபவத்தை கருத்திற்கொண்டு இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

தற்போது பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவிற்குப் பொறுப்பாகவுள்ள ரவி வைத்தியாலங்கார கடந்த மார்ச் 18 ஆம் திகதிமுதல் அமுலுக்கு வரும் வகையில் பிரதிப் பொலிஸ் மாஅதிபராக பதவியுயர்த்தப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பொறுப்பாகவுள்ள ரவி செனவிரத்ன, கடந்த மே மாதம் 15 ஆம் திகதிமுதல் அமுலுக்கு வரும்வகையில் பதவியுயர்த்தப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்