பாடசாலை மாணவர்கள் மத்தியில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் தொடர்பில் ஆராய்வு

பாடசாலை மாணவர்கள் மத்தியில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் தொடர்பில் ஆராய்வு

பாடசாலை மாணவர்கள் மத்தியில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் தொடர்பில் ஆராய்வு

எழுத்தாளர் Staff Writer

19 Jun, 2015 | 9:24 am

பாடசாலை மாணவர்கள் மத்தியில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருளை கண்டறிவதற்கு அதன் மாதிரியை அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அறிக்கை கிடைத்ததன் பின்னர் அதனை விற்பனைசெய்யும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் பொதுமக்களுக்கு தகவல் தெரிந்தால், பொலிஸாருக்கு அறிவிக்க முடியுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

அண்மைக்காலமாக பாடசாலைகளுக்கு அருகில் போதையூட்டும் ஒருவகை பானம் விற்பனை
செய்யப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த விடயம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் உயரதிகாரிகளுக்கு, பொலிஸ் மாஅதிபரினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக ருவன் குணசேகர தெரிவித்தார்.

அத்துடன், பாடசாலைகளுக்கு அருகில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதாக சந்தேகித்தால், அதுகுறித்து அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்துமாறும் பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது.

கடந்தவாரம் 119 என்ற பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய,
கொட்டாஞ்சேனையில் போதைப்பொருள் கலக்கப்பட்ட குளிர்பானம் கைப்பற்றப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்