தேசிய அருங்காட்சியகத்தின் பாதுகாப்பிற்காக புதிய உபகரணங்களை பொருத்தத் திட்டம்

தேசிய அருங்காட்சியகத்தின் பாதுகாப்பிற்காக புதிய உபகரணங்களை பொருத்தத் திட்டம்

தேசிய அருங்காட்சியகத்தின் பாதுகாப்பிற்காக புதிய உபகரணங்களை பொருத்தத் திட்டம்

எழுத்தாளர் Staff Writer

19 Jun, 2015 | 2:38 pm

தேசிய அருங்காட்சியகத்தின் பாதுகாப்பு நடைமுறைகளுக்காக புதிய உபகரணங்களை பொருத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக கலாச்சார மற்றும் கலை விவகார அமைச்சர் நந்திமித்ர ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேசிய அருங்காட்சியகத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை அமைச்சர் நந்திமித்ர ஏக்கநாயக்க மேற்கொண்டிருந்தார்.

தற்போது நடைபெற்று வரும் புனர்நிர்மாணப் பணிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆரம்பமானது. இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் நிறைவு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.

எதிர்காலத்தில் புதிய தொழிநுட்பத்துடன் கூடிய உபகரணங்களையும் பொருத்துவதற்கும் தீர்மானித்துள்ளதாகவும் இதற்காக விசேட பொலிஸ் பிரிவொன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் நந்திமித்ர ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்