தம்புள்ளை முன்னாள் மேயர் ​தொடர்ந்தும் விளக்கமறியலில்

தம்புள்ளை முன்னாள் மேயர் ​தொடர்ந்தும் விளக்கமறியலில்

தம்புள்ளை முன்னாள் மேயர் ​தொடர்ந்தும் விளக்கமறியலில்

எழுத்தாளர் Staff Writer

19 Jun, 2015 | 8:17 am

தம்புள்ளை முன்னாள் மேயர் ஜாலிய ஓபாத்த அடுத்தமாதம் இரண்டாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டபோது, இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கண்டலம வாவியில் அகழ்வு பணிகளை முன்னெடுத்த குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.

கண்டி மோசடி ஒழிப்பு பிரிவினரால் நேற்று அவர் தம்புள்ளையில் கைதுசெய்யப்பட்டிருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்