டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் கீழ் கொழும்பிலுள்ள 7883 வீடுகள் சோதனை

டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் கீழ் கொழும்பிலுள்ள 7883 வீடுகள் சோதனை

டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் கீழ் கொழும்பிலுள்ள 7883 வீடுகள் சோதனை

எழுத்தாளர் Staff Writer

19 Jun, 2015 | 1:32 pm

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் சுமார் 7883 வீடுகள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.

சோதனைக்குட்படுத்தப்பட்ட வீடுகளில் 978 வீடுகளின் சூழல் டெங்கு நுளம்பு பரவும் வகையில் காணபட்டதாக மாநகர சபையின் பொது சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜயமுனி தெரிவிக்கின்றார்.

மேலும் இந்த சோதனை நடவடிக்கையில் 92 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பட்டார்.

டெங்கு காய்ச்சல் பெருகுவதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அனைவரும் முன்னெடுக்க வேண்டுமெனவும் கொழும்பு மாநகர சபை வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை, வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 15,424 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

கொழும்பு மாவட்டத்தில் 4,404 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுப் பிரிவு குறிப்பிடுகின்றது.

கம்பஹா மாவட்டத்தில் 2,096 நோயாளர்களும், களுத்துறையில் 749 நோயாளர்களும் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்